புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்
புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை வழங்கினார்.
புதுச்சேரி,
புதுவை அரசு சார்பில் உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழா மைதானத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி காலை 9 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோர் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். இதன்பின் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை நாராயணசாமி பார்வையிட்டார்.
பின்னர் விழா மேடைக்கு திரும்பிய முதல்-அமைச்சர் நாராயணசாமி சுதந்திர தின உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்த போலீசார் மற்றும் என்.சி.சி. மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங் களை வழங்கி கவுரவப்படுத்தினார்.
தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித் திட்டம், சமுதாய நலப்பணித் திட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதை விழா மேடையில் நின்றவாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் பல்வேறு மாநில கலைக்குழுவினரின் அணிவகுப்பும் அரசு மற்றும் தனியார் பள்ளி, ஜவகர் பால் பவன் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சிறந்த அணிவகுப்பிற்கான விருதுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனவேலு, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகி ராமன், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன், முன்னாள் எம்.பி., ராமதாஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேராக சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.