ரெயில் பயணியிடம் ரூ.12 லட்சம் நகை பறித்த 4 பேர் கைது

ரெயில் பயணியிடம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-08-15 23:27 GMT
மும்பை, 

மும்பை மலாடை சேர்ந்தவர் ஹித்தேஷ். இவர் சம்பவத்தன்று ஜாவேரி பஜாரில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கினார். பின்னர் மெரின்லைனில் இருந்து ரெயிலில் வந்தார். அப்போது, இவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பாந்திரா ரெயில் நிலையத்தில் அவர் வைத்திருந்த நகை பையை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து ஹித்தேஷ் பாந்திரா போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையர்கள் 4 பேரின் அடையாளமும், அவர்கள் மலாடு ரெயில் நிலையத்தில் இருப்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் உடனே அங்கு சென்று கும்பலின் தலைவனான சச்சின் குஞ்ச்கர்வே உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கொள்ளை கும்பல் பைதோனி, ஜாவேரி பஜார், பாந்திரா, கிராண்ட் ரோடு பகுதியில் நகைகள் வாங்கி செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்