நெல்லையில் சுதந்திர தின விழா கோலாகலம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார்
நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசியக்கொடி ஏற்றினார். மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நெல்லை,
சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. காலை 8.30 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் இசைக்குழு சார்பில் பேண்டு வாத்தியத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உடன் இருந்தார். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல்படை மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் வரிசையாக அணிவகுத்து வந்து கலெக்டருக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன்பாரதி மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் மொழிப்போர் தியாகிகள், மொழிக்காவலர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பாக பணியாற்றியதாக டாக்டர்கள் ஆறுமுகபாண்டியன் என்ற மோகன், ஆனந்தி, அமுதா, செவிலியர் பயிற்றுனர் செல்வன், செவிலியர்கள் நிர்மலா, சித்திரைகனி, முத்துலட்சுமி, வேணிஸ்ரீ, ராமலட்சுமி, செவிலிய உதவியாளர் சுகந்தி, மருந்தாளுனர் சைமன்ஜெபராஜ், கண்காணிப்பாளர் அருணா, டிரைவர் அசோகன், மற்றும் சுகாதாரநிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் சரவண பிரகாஷ், மகாலட்சுமி, பரிடா ஷெரின், இசக்கிராஜா, கலையரசி, நம்பிநாச்சியார், டேனியல் மற்றும் அலுவலர்களுக்கும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் சூப்பிரண்டு உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னரசு (தாழையூத்து), ராஜேந்திரன் (சங்கரன்கோவில்), இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார் (பேட்டை), ராபின்சன் (மானூர்), பாலமுருகன் (தென்காசி), அண்ணாமலை (குற்றஆவணகாப்பகம்), ஸ்டீபன் ஜோஸ் (பணகுடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு போலீஸ்காரர்களுக்கும், ஊர்காவல் படையினர் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோன்று வேளாண்மை, வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், புதுவாழ்வு திட்டம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை சார்பில் மொத்தம் 146 பேருக்கு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 99 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பதக்கம் அணிவித்தார்.
இதையடுத்து 8 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேசிய ஒருமைப்பாடு, தேசப்பற்று, பாரம்பரிய விளையாட்டு, யோகா ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் பாடல்களுக்கு நடனம் ஆடினர். இதில் மொத்தம் 1,091 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மாணவ, மாணவிகள் மூவர்ண உடைகள் மற்றும் பல்வேறு சீருடைகள் அணிந்து அனைவரையும் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சுதந்திர போராட்ட வீரர்கள் வேடம் அணிந்த மாணவ- மாணவிகள் குதிரை, மாட்டு வண்டிகளில் சவாரியாக வந்தனர். இதை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
விழாவில் விஜிலா சத்யானந்த் எம்.பி., நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) கபில்குமார் சரத்கார், துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மருத்துவ கல்லூரி டீன் சித்தி அத்திய முனவரா, முதன்மை கல்வி அலுவலர் தனமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.5 ஆண்டுகளுக்கு பிறகு வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா நடந்ததால் கேலரியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வ.உ.சி.மைதான பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க பாளையங்கோட்டையில் நேற்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.