பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா: அன்னையின் தேர்ப்பவனி

வடக்கன்குளம்,
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயத் திருவிழா, கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற்றது. விழா நாட்களில், தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருனை ஆசீரும், ஆராதனையும் நடைபெற்றது. 14-ந் தேதி 9-ம் திருவிழாவை முன்னிட்டு, ஆயர் தலைமையில் திருவிழா ஆராதனையும், மறையுரையும், நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அன்னையின் தேர்ப்பவனி நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருப்பலியும், காலை 5 மணிக்கு உறுதிபூசுதல் திருப்பலி ஆயர் தலைமையில் நடந்தது. காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும், காலை 8 மணிக்கு ஆங்கிலத் திருப்பலியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடும், நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. திருவிழாவில், அருட்தந்தையர்கள் மரியதாஸ், சகாயம், தேவராசன், சூசைமாணிக்கம், ஜோதி, பாக்கியநாதன், மைக்கிள் ஜெகதீசன், அன்புச்செல்வன், நெல்சன், செல்வராயன், பிரான்சிஸ், அமல்ராஜ், பென்சிகர், ஜோசப் காலின்ஸ், கிங்ஸ்டன், கலைச்செல்வன், ரொனால்டு மற்றும் அருட்கன்னியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று(புதன்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் முதல் திருப்பலியும், இரவு 9.30 மணி முதல் விடிய விடிய ஜெபமாலை வழிபாடும், மறுநாள்(வியாழக்கிழமை)காலை 5 மணிக்கு நிறைவு திருப்பலியும் நடைபெறுகிறது.