பாடல் பிறந்த கதை

பாரதியார் ஆங்கிலேய அதிகாரிகளின் தேடலால், புதுச்சேரியில் சிறிது காலம் தலைமறைவாக தங்கியிருந்தார்.;

Update: 2017-08-15 07:30 GMT
அப்போது பாண்டித்துரை தேவர் தலைமையில் இயங்கிய மதுரை தமிழ்ச்சங்கம் தமிழ்நாட்டைப் பற்றி சிறந்த பாடல் புனைவோருக்கு பரிசுப் போட்டியை அறிவித்திருந்தது. அதைக் கண்ட பாரதிதாசன் போன்றவர்கள் பாரதியாரிடம் பாடல் எழுதி அனுப்பச் சொன்னார்கள்.

ஆங்கிலேய அரசாங்கத்தால் தேடப்படும் நான், பாடல் எழுதி அனுப்பினால் அதை தமிழ்ச்சங்கத்தினர் தேர்வு செய்ய மாட்டார்கள் என்று பாரதியார் மறுத்துவிட்டார். இருந்தாலும் நண்பர்கள் அவரை மிகவும் வற்புறுத்தியதால் ஒரு பாடலை இயற்றுவதாக கூறி, எழுதி அனுப்பினார்.

அந்தப் பாடல்தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே.. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்ற தன்னிகரற்ற பாடலாகும்.

மேலும் செய்திகள்