ஆங்கிலேயரை மிரளவைத்த இந்தியாவின் முதல் ‘பந்த்’

ஆங்கிலேயரின் அடக்குமுறை, தேவையற்ற வரிவிதிப்பு போன்ற காரணங்களால்,

Update: 2017-08-15 06:07 GMT
நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி மக்கள் தங்களது எதிர்ப்பை காண்பித்துக் கொண்டிருந்தனர். 1810-ம் ஆண்டு பெனராசில், ஆங்கிலேயர்கள் தேவையற்ற முறையில் வீட்டுவரி விதித்தனர்.

நடுத்தர வர்க்கத்தினர், கடை முதலாளிகள், அலுவலர்களின் வீடுகள் மீதும் வரி விதிக்கப்பட்டன. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் தங்களது எதிர்ப்பை காண்பிக்க அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை. அதற்கு பதிலாக, ஒரு நூதன முறையை கையாண் டனர்.

அதன்படி அவர்கள் காலையில் ஒரு இடத்தில் ஒன்று கூடுவார்கள். அங்கே, வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மனு எழுதுவார்கள். அந்த மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பின் வர்த்தகர்கள் தங்களது கடைகளை மூடி விடுவார்கள். அதுபோல் வர்த்தக அலுவலகங்களும் மூடப்பட்டு விடும்.

இதுபோல் தொடர்ந்து 30 நாட்கள் அந்த நூதன போராட்டம் நடந்தது. கடைகள், வர்த்தக அலுவலகங்கள் மூடப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, பெனாரசில் ஸ்தம்பித்து போனது. தொடர்ந்து 30 நாட்களும் அமைதியாக போராட்டம் நடந்தது. வன்முறைகள் எங்கும் நடைபெறவில்லை.

தொடக்கத்தில் வர்த்தகர்களின் மனுக்களை ஆங்கிலேய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதை கண்ட அதிகாரிகள் மிரண்டு போய், வீட்டு வரியை ரத்து செய்தனர். இதுவே இந்தியாவின் முதல் ‘பந்த்’ ஆக சித்தரிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்