ஜீவாவின் கதர் பற்று

மகாத்மா காந்தியின் கதர் திட்டம், தீண்டாமை ஒழிப்பு போன்ற கொள்கைகளில், சுதந்திரப் பற்றுள்ள பலரும் நாட்டம் கொண்டிருந்தனர்.;

Update: 2017-08-15 05:28 GMT
இரு கொள்கைகளையும் கண்களாக கொண்டு செயல்பட்டவர் என்றால் அது தோழர் ஜீவாதான். பள்ளி இறுதி வகுப்பு படித்தபோது அவரது தாயார் காலமாகிவிட்டார். வீட்டிற்கு அவரே மூத்த பிள்ளை என்பதால் ஈமச் சடங்குகளை ஜீவா செய்ய வேண்டியிருந்தது. கோடித் துணி உடுத்துவதும் சடங்குகளில் ஒன்று. ஆனால் கதர் அல்லாத வேறு துணி கோடித்துணியாக வழங்கப்பட்டது. கதரைத் தவிர வேறு ஆடைகளை உடுத்துவதில்லை என்று சபதம் பூண்டிருந்த ஜீவா, கோடித்துணியை உடுத்த மறுத்துவிட்டார்.

சடங்குகள் தள்ளிப்போடப்பட்டு அருகில் உள்ள பெரிய ஊர்களுக்குச் சென்று கதராடைகளை வாங்கி வர புறப்பட்டனர் உறவினர்கள். ஆனால் எங்கும் கதர் கிடைக்கவில்லை. பெரியவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜீவா வேறு துணியை உடுத்த மறுத்துவிட்டார். அதனால் அவரை தாயாருக்கு கொள்ளி வைக்க அனுமதிக்கவில்லை. இறுதியில் அவரது தம்பியே தாய்க்கு நெருப்பு மூட்டி கொள்ளி வைத்தார். ஜீவா இளம் வயதிலேயே கொள்கைப் பிடிப்புடன் வளர்ந்தவர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

மேலும் செய்திகள்