சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் தட்டி எழுப்புவோம்
நமக்கு சும்மா கிடைத்ததா சுதந்திரம்? எண்ணிலடங்கா உயிர் தியாகங்களின் மூலமாகவும்,
அகிம்சை வழியில் கத்தியின்றி ரத்தமின்றி அடைந்த துயரங்களையெல்லாம் துச்சமென எண்ணி உடல், பொருள், ஆன்மா என அத்தனையும் இழந்த நமது முன்னோர்களால் உடைத்தெறியப்பட்டது அடிமை விலங்கு.
சுதந்திரம் என்பது கட்டுப்பாடில்லாமல் திரிவது என பலர் நினைக்கின்றனர். அது சுதந்திரமா? தன்னை யாரும் கட்டுப்படுத்த அவசியமில்லாமல் வாழ்வதுதான் சுதந்திரம். நம் ஒவ்வொருவரும் பல்வேறு உரிமைகளைப் பெற்றிருப்பதை போல், நமக்கான கடமைகளும் உள்ளன என்பதை எத்தனை பேர் உணர்ந்து செயல்படுகிறோம் என்று நம்மில் கேள்வி எழுகிறது.
நம்மில் யார் சுதந்திரமான மனிதன்? என்று சிந்திக்கும் போது, கட்டுப்பாடுகளே இல்லாத நிலையில் எவன் ஒருவன் கண்ணியத்தை கடைப்பிடிக்கிறானோ! அவனே சுதந்திரமான மனிதன் என்று உறுதிபட கூறி விட முடியும். முழு சுதந்திரம் பெற்ற மனிதன், ஒரு போதும் அடிமையாக வாழ மாட்டான். மற்றவர்களுடைய கண்காணிப்பையும், அடக்குமுறையையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
சொல்லும் சொல்லிலும், செய்கின்ற செயலிலும் மற்றவர்களின் சுதந்திரம் பறிபோகும் விதமாக நடந்து கொள்ளாமல், தனது எல்லையை உணர்ந்து, ஒரு வட்டத்திற்குள் இன்பமாக வாழ்க்கை நடத்துவதையே விரும்புவான். நற்சிந்தனை, சுய ஒழுக்கம், சமூக அக்கறை, சட்டத்தை மதித்து நடத்தல் என சுயமரியாதை பாதிக்காமல் வாழக் கற்றுக்கொள்வதே உண்மையான சுதந்திரம்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடமைகள் பல உள்ளன. தனக்குத்தானே நேர்மையாகவும், தனது சிந்தனை மூலமாகவும், செயல் மூலமாகவும், தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் விதமாக தீய பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது முதல் கடமையாகும்.
ஒவ்வொருவருக்கும், வாழும் சுதந்திரமும், தனது வாழ்க்கையை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைத்து கொள்ளும் உரிமையும் உண்டு என்றாலும், அது மற்றவரை பாதிப்பதாக இருக்கக்கூடாது. எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்தும் தனிமனித பாதுகாப்பிற்கும், சமுதாய வளர்ச்சிக்கும், தேசத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் துணை நிற்க வேண்டும். சுதந்திரம் என்ற சொல்லின் உட் பொருளும் இவையே என கருதலாம். நல்லெண்ணம், நற்செயல்களால் சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் தட்டி எழுப்புவோம்.
மூவர்ணக்கொடியை முதலில் வணங்குவோம். மூச்சு உள்ளவரை தேசிய கீதம் பாடுவோம். எல்லோரும் உறவென்று இதயத்தால் சொல்லுவோம். நமது கடமைகளை தவறாமல் ஆற்றுவதே, சுதந்திரத்தை பேணும் வழியென்பதை, உள்ளத்தால் உணர்ந்து செயலாற்றுவோம்.
சுதந்திர காற்றை சுவாச காற்றாக்கிய தியாகிகள் அனைவருக்கும், நாம் அனைவரும் உணர்வால் நன்றி செலுத்துவோம்.
- முனைவர்.கவிதாசன், கோவை.