தமிழக தியாகியின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய போராடிய மகாத்மா காந்தி
இந்தியா சுதந்திரத்தை நெருங்கிய 1942-ம் ஆண்டு.. வெள்ளையனே வெளியேறு என்றும் செய் அல்லது செத்துமடி என்றும், காந்திஜி அப்போது போராட்டங்களை அறிவித்தார்.
உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட கிளர்ச்சிகள் வலுத்தன. இந்த தருணத்தில் நாடு முழுவதும் 1 லட்சம் பேர் சுதந்திரத்துக்காக சிறைக்கு சென்றனர்.
அந்த சமயத்தில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கடற்கரை உப்பளத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை தாக்கவும், கொல்லவும் முயன்ற போலீசாரை பிடித்து கட்டிப்போட்டனர். அவர்களிடமிருந்த 16 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். திரும்பும் வழியில் முஸாபரி பங்களா இருந்தது. ஆஷ் துரை போல் ஆதிக்கம் செய்து வந்த லோன் துரை என்ற ஆங்கிலேய அதிகாரி அங்கிருந்தான்.
விடுதலை இயக்க வீரர்களின் சத்தம் கேட்டு அவன் வெளியில் வந்தான். நடப்பதை புரிந்து கொண்ட லோன் துரை பங்களாவில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து, சுட முயன்றான். பி.எஸ். ராஜகோபாலன் என்ற இளைஞரின் நெஞ்சை அவன் துப்பாக்கி குறி பார்த்தது. அந்த நொடியில் மற்றொரு இளைஞன் சுறுசுறுப்பாக செயல்பட்டு, வேல் கம்பை எடுத்து வீசினார். லோன் துரையின் துப்பாக்கி விசை இயங்கும் முன்பு துள்ளி வந்த வேல் ஆவேசமாக லோன் துரையின் கழுத்தை சீவி அறுத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கிலேயே அதிகாரிகள் குலசேகரப்பட்டினம் சதி வழக்கு என்ற வழக்கை போட்டனர். நெல்லையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் இந்த வழக்கை விசாரித்து தண்டனைகளை அறிவித்தார். காசிராஜன், ராஜகோபாலுக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் அறிவித்தார். ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனை, இருவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பு வழங்கினார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் தஞ்சாவூர், வேலூர், நெல்லை கொக்கிரக்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். தூக்கு தண்டனை பெற்றவர்களை காந்திஜி நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார்.
அவர்களை விடுவிக்க காந்திஜி, ராஜாஜி ஆகியோர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். லண்டன் பிரிவு கவுன்சில் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திலும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அனைவரும் பெரும்பாலும் 20 வயதை சேர்ந்தவர்கள். தலைவர்களின் முயற்சியால் இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் வேவல் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். 1946-ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை மாநிலத்தில் டி.பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் இடைக்கால மந்திரி சபை அமைத்தது. அதன் பின்னர் விடுதலையும் கிடைத்தது. இந்த வழக்குக்கு பிறகு ராஜகோபாலன் ‘தூக்குமேடை ராஜகோபாலன்’ என்ற பெயரில் தமிழகத்தில் அழைக்கப்பட்டார்.
இதே தருணத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் கைப்பற்றப்பட்டதாகும். இந்த காவல் நிலையத்தில் இருவர், இரவில் பாரா காவலர்களாக இருப்பர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு பாடையை கட்டி அதில் ஒருவரை பிணம் போல் கிடத்தினர். போலீஸ் ஸ்டேஷன் வழியே இரவில் சவ ஊர்வலம் நடத்தினர். ஒருவர் சங்கு ஊத, இன்னொருவார் சேகண்டி தட்ட, மற்றொருவர் கொள்ளிச்சட்டி ஏந்தி ஊர்வலம் நடந்தது. வெளிச்சத்தில் ஆட்டம் பாட்டத்தை பார்க்க துப்பாக்கியை சாய்த்து வைத்துவிட்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர்.
நாட்டையே ஆண்ட மகாராஜா செத்து போனாரே என ஒருவர் ஒப்பாரியாக சொன்னார். “என்னப்பா சொல்ற, விளங்குமாறு சொல்லு” என்று ஒரு போலீஸ்காரர் கேட்டார். “அதுதான்யா இது பிரிட்டிஷ் மகாராஜா” என்று கூறி போராளிகள் இரு போலீஸ்காரர்களையும் இழுத்து போய் போலீஸ் லாக்கப்பில் வைத்து பூட்டினர். அதுவரை பாடையில் ஈ மொய்த்து பிணமாக கிடந்தவர் எழுந்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று ஆனந்த கொண்டாட்டம் போட்டார். காவல் நிலையத்திலிருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு போராளிகள் புறப்பட்டனர். மாவட்ட தலைநகர் நெல்லைக்கு செய்தி உடனே எட்டாத அளவிற்கு தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன. இது போராளிகளின் முன் ஏற்பாடு ஆகும்.
எனினும் சில நாட்கள் கழித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஹெச்மாடி மலபார் போலீஸ் படையோடு வந்து காவல் நிலையத்தை மீட்டார். குரும்பூரில் ரெயில் நிலையம், மெஞ்ஞானபுரம் தபால் நிலையம் என நெல்லை மாவட்டம் சுதந்திர போராட்ட போராளிகளால் கைப்பற்றப்பட்டது. இதற்கு எதிராக போலீஸ்காரர்கள் கிராமம், கிராமமாக சென்றனர். மக்களை மிருகங்களாக வேட்டையாடினர். நகக்கணுக்கிடையில் ஊசிக் குத்தினர். ரோமத்தை பிடுங்கினர். சித்ரவதை செய்தனர். அப்பாவி மக்களை கொடுமைப்படுத்தினர்.
விடுதலை போராட்ட போராளிகள் கே.டி. கோசல் ராம் முன்னணியில் திரண்டனர். அவர் போலீஸ் கொடுமைக்கு முடிவுகட்ட ஜப்பானியர் போல் நாம் தற்கொலை படை அமைக்க வேண்டும் என்றார். அதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார். அதில் சேர விரும்புவோர் ரத்த கையெழுத்திடுங்கள் என வெள்ளை தாளை நீட்டினார். கடையனோடை ஜி.மகாராஜன், அமலிபுரம் பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், பரம்மன் குறிச்சி நாகமணி வாத்தியார், கொழுவைநல்லூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைவிரலில் ஊசிக்குத்தி ரத்த கையெழுத்திட்டனர். கானம் வெள்ளை கண்ணு, மேலாம்பூர் வீரபாகு, வள்ளிவிளை துரைராஜீ உள்ளிட்டோர் அனைத்து உதவிகளையும் அவர் களுக்கு செய்வதாக வாக்களித்தனர்.
18 வயதான மங்களா பொன்னம்பலம் என்பவர் போலீஸ், ராணுவ படைகளுக்குள் நுழைந்து போராளிகளின் உளவாளியாக தகவல் சேகரிக்க பணிக்கப்பட்டார். அவர் பணி அற்புதமாக அமைந்தது. நெல்லை மாவட்ட சுதந்திர போராளிகளின் பணி ஒரு பெரிய நாட்டின் ராணுவ சேனையின் கட்டுக்கோப்போடு திகழ்ந்தது.