திருமணமான 4 மாதத்தில் பரிதாபம் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-08-14 23:16 GMT
மங்களூரு, 

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கோரம்பாடி பகுதியை சேர்ந்தவர் கேசவகவுடா (வயது 32). தொழிலாளி. இவருக்கும் புத்தூர் டவுனை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கேசவகவுடாவின் மனைவி ஆடி மாதத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பி வருவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கேசவகவுடா சிறிது நேரத்தில் வெளியே சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது கோரம்பாடி கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் கேசவகவுடா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கேசவகவுடாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேசவகவுடாவின் குடும்பத்தினர் அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த புத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து கேசவகவுடாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.

இதனை தொடர்ந்து அவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்