எம்.எல்.ஏ.க்களை மறைத்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை
எம்.எல்.ஏ.க்களை மறைத்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
நாங்கள் எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்து இருப்பதாக மேலூர் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார். அதற்கு அவசியம் இல்லை. அனைவரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறோம். ஜெயலலிதா வழியில் வந்த அனைவரும் சேவகர்களாகத்தான் நடந்து வருகிறோம். எங்களிடம் எஜமானர் போக்கு கிடையாது. இது எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் மடியில் கனம் இல்லை. விரைவில் எல்லாவற்றுக்கும் தீர்வு பிறந்து நல்லது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.