குடிநீர் கேட்டு தெருக்களின் நுழைவு வாயிலில் காலி குடங்களை தோரணமாக கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள், காலி குடங்களை தெருக்களின் நுழைவு வாயிலில் தோரணமாக கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்புரம் பஞ்சாயத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சீதாராமன்பட்டி, குமாராசாமிபரும், காமராஜ்நகர், அம்மையடியான்பட்டி ஆகிய பகுதிகளில், கடந்த 2 மாதங்களாக தாமிரபரணி ஆற்றிலிருந்தும், ஆழ்குழாய் கிணறு மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால், இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும், குடிநீர் வினியோகத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டிக்கும் வகையில், தெருக்களின் நுழைவு வாயிலில் காலி குடங்களை மரத்தில் கட்டி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்,‘ பலமுறை வலியுறுத்தியும் குடிநீர் வினியோகம் செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இனியாவது எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பஞ்சாயத்து நிர்வாகமும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.