பாளையங்கோட்டையில் செவிலிய உதவியாளரிடம் நகை பறித்த வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் செவிலிய உதவியாளரிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி புஷ்பம் (வயது 58). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலிய உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பெருமாள்புரத்தில் வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். அப்போது புஷ்பம் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த 2 பேரையும் விரட்டி சென்றனர்.
அவர்கள் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்தனர். இன்னொருவன் தப்பி ஓடி விட்டான். பிடிபட்டவனுக்கு தர்மஅடி கொடுத்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அப்போது அவன் மயங்கிய நிலையில் இருந்ததால், அவனிடம் போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு அவனிடம் விசாரித்தனர்.
அதில் அவன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த எபிரோன்(20) என்பதும், அவனுடன் வந்தவன் அதே ஊரை சேர்ந்த மோகன்(21) என்பதும் தெரியவந்தது. புஷ்பத்திடம் பறித்த நகையை மோகன் கொண்டு சென்றுவிட்டதாகவும் போலீசாரிடம் எபிரோன் கூறினான்.
இதைத்தொடர்ந்து போலீசார் எபிரோனை கைது செய்தனர். தப்பி ஓடிய மோகனை தேடி வருகிறார்கள்.