ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு: உண்மை நிலையை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து உண்மை நிலையை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 34-வது நாளாக கதிராமங்கலம் அய்யனார்கோவில் திடலில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவிரி உரிமை மீட்புக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மணியரசன், உழவர் உழைப்பு திராவிட கட்சி ஜோதிகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து, ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதையடுத்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
கதிராமங்கலம் மற்றும் மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுவதாலும், கச்சா எண்ணெய் கசிந்து வயல்கள் பாதிக்கப்படுவதாலும் மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கதிராமங்கலம் பிரச்சினையில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். நீதியின் அடிப்படையில் போராட்டம் முடித்து வைக்கப்பட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, இங்கு எந்தவிதமான திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடிநீர் மற்றும் மண்வளம் பாதிக்கப்பட்டு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது என மக்கள் அச்சப்படுகின்றனர். இதை அரசியல் பார்வையாக நோக்காமல், வருமான ரீதியாகவும் பார்க்காமல், எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி, வாழ்க்கையை கருத்தில் கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் இந்த போராட்டம் நடைபெற்று இருக்காது. நீட்தேர்வு, ஜி.எஸ்.டி. போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்திருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மத்தியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. பேசுகையில், கதிராமங்கலம் மக்கள் பணத்துக்காக போராடவில்லை. இந்த மண்ணுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் நான், கருணாஸ், தனியரசு ஆகியோரும் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினை பற்றி பதிவு செய்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்தும் தீர்வு காண வலியுறுத்தினோம் என்றார்.
அதனைத்தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. பேசுகையில், கதிராமங்கலம் மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் களத்தில் இறங்கி போராடுவோம். ஜல்லிக்கட்டுக்கு நாடே திரண்டு எழுந்தது போல், இயற்கை வளத்தை பாதுகாக்க நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரள வேண்டும். காவிரி டெல்டா பகுதி எதிர்காலத்தில் பாலைவனமாக மாறக்கூடாது என்றால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இங்கிருந்து வெளியேற வேண்டும். மக்களை பாதிக்கும் எந்த திட்டங்கள் வந்தாலும் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து கொண்டே தான் இருப்போம் என்றார்.
தனியரசு எம்.எல்.ஏ. பேசும் போது, மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை போக கூடாது என்றார்.
போராட்டக்குழுவை சேர்ந்த அனிதா பேசுகையில், கதிராமங்கலம் போராட்டத்தை பற்றி யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். இந்த திட்டம் யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என விவாதிக்காமல், பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட பாதிப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன்அன்சாரி ஆகியோர் பார்வையிட்டனர்.