திருவாரூரில் பலத்த மழை போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு
திருவாரூரில் பெய்த பலத்த மழையால் போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது
திருவாரூர்,
வங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்றி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மதியம் 3 மணிக்கு திடீரென வானம் கருமேக கூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழையினால் திருவாரூர் கீழவீதியில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்தது. அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சிக்னல் கம்பம் சாய்ந்ததால் கீழவீதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கம்பத்தை உடனடியாக அகற்றி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.
பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாங்குடி, புலிவலம், கிடாரம்கொண்டான், அடியக்கமங்கலம், வண்டாம்பாளை, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான காற்றுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.