திருச்சியில் வீர விவேகானந்தர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் வீர விவேகானந்தர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் சாலைகளுக்கு தியாகிகள் பெயர்களை சூட்ட கோரிக்கை
மலைக்கோட்டை,
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் திருச்சி மலைக்கோட்டை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பேரவை நிறுவனர் ரஞ்சித்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் ரமேஷ், பிரபாகரன், ராஜேஷ், கமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும், விடுதலைக்கு முன்பு ஆங்கிலேய அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக ஆங்கிலேய அரசு பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டியிருந்த்து. இந்த பெயர்களை மாற்றி விட்டு நமது தேச விடுதலைக்காக போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த வீர தியாகிகளின் பெயரை சூட்ட வேண்டும். பாட நூல்களில் மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட தியாகிகளின் வரலாறுகளையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் தனபால் நன்றி கூறினார்.