குமாரபாளையம் அருகே தொழிலாளி மர்மசாவு கொலையா? போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

Update: 2017-08-14 23:00 GMT
பள்ளிப்பாளையம்,

குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் நேற்று ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்து கிடந்தவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ஜவுளி கடை தொழிலாளி சேகர் (வயது 42) என்பதும், இவருக்கு திருமணமாகி சின்னபாப்பா என்ற மனைவியும், குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 15 ஆண்டுகளாக குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை அண்ணாநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தது தெரியவந்தது.

இவருடைய தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்