தொழில் போட்டியால் டிரைவரை கத்தியால் குத்தி காருக்கு தீ வைத்தவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூரைச் சேர்ந்தவர் பாரதிதாசன்.

Update: 2017-08-14 21:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூரைச் சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 40). சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறார். ராமநாதபுரம் அருகே உள்ள தியாகவன்சேரி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு (28). இவர் உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு குழந்தைவேலு மதுரைக்கு சவாரி செல்ல வேண்டும் என்று கூறி பாரதிதாசனை காரில் அழைத்து சென்றுள்ளார். அச்சங்குளம் எல்லை பகுதியில் காரை நிறுத்த சொல்லிய குழந்தைவேலு தகராறில் ஈடுபட்டு கத்தியால் பாரதிதாசனை குத்தியுள்ளார். மயங்கிய நிலையில் பாரதிதாசனை கீழே தள்ளிவிட்டு காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்ற குழந்தைவேலு உத்தரகோசமங்கை அருகே அச்சங்குளம் பகுதியில் காரை நிறுத்தி டிரைவர் இருக்கையை தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து திரும்பி வந்துள்ளார்.

 இது குறித்து உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தைவேலுவை கைது செய்து காரை மீட்டனர்.

மேலும் செய்திகள்