தமிழக மருத்துவ துறையில் உதவி மருத்துவ அதிகாரி வேலை
தமிழக மருத்துவ துறையில் உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழக மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் சுருக்கமாக எம்.ஆர்.பி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு சித்தா மருத்துவ பிரிவில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்காலிக பணியிடங்களான இதற்கு 101 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சித்தா மருத்துவம் சார்ந்த பி.எஸ்.எம்.எஸ். எப்.பி.ஐ.எம்., ஜி.சி.ஐ.எம்., பி.ஐ.எம்., எல்.ஐ.எம்., எம்.டி. போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சித்தாவில் டிப்ளமோ படித்து குறிப்பிட்ட வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொது பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.750-ம் மற்றவர்கள் ரூ.375-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 22-8-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணைய தள முகவரியைப் பார்க்கவும்.