வங்கியில் 382 வக்கீல் பணிகள்
ஓரியண்டல் வர்த்தக வங்கியில் வக்கீல் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று, ‘ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்’. வர்த்தக வங்கியான இதன் பல்வேறு கிளைகளிலும் வக்கீல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜ்மீர், போபால், ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்ப்பூர் உள்ளிட்ட 28 கிளைகளில் மொத்தம் 296 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 58 இடங்களும், ஹனுமங்காரில் 29 இடங்களும், ஸ்ரீகங்காநகரில் 36 இடங்களும், போபாலில் 22 இடங்களும், பைகானெரில் 22 இடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...
கல்வித்தகுதி:
சட்ட பட்டப்படிப்புடன், வங்கிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் 26-8-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
86 பணியிடங்கள்:
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி ஆக்ரா, அலிகார், கோரக்பூர், கான்பூர், லக்னோ, ரேபரேலி, வாரணாசி உள்ளிட்ட 20 கிளைகளில் வக்கீல் பணியிடங்களுக்கு 86 பேரை தேர்வுசெய்ய உள்ளனர்.
சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், சிவில் கோர்ட்டு, ஐகோர்ட்டு, நுகர்வோர் கோர்ட்டு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது வங்கித்துறை, நிதி நிறுவனங்களில் வக்கீலாக பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 31-8-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.obcindia.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.