தொழில் பயிற்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மாநில அரசு சொற்ப நிதியே செலவிட்டது
தொழில் பயிற்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மாநில அரசு சொற்ப நிதியே செலவிட்டது என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபையில் தலைமை கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலத்தில் உள்ள 250 தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐ.டி.ஐ) வளர்ச்சிக்காக மாநில அரசு ரூ.625 கோடி ஒதுக்கீடு செய்திருந்த போதிலும், கடந்த 5 முதல் 9 ஆண்டுகளில் வெறும் ரூ.167 கோடியே 27 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த 2015–16 நிதியாண்டில் மாநில அரசுக்கு சேர வேண்டிய வரி பாக்கி ரூ.1 லட்சம் கோடியை வசூலிப்பதில் அரசு மிகவும் மந்தமாக செயல்படுவதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.