பராமரிப்பு பணியால் ரெயில்சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி

பராமரிப்பு பணியால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2017-08-13 22:06 GMT

மும்பை

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடமான மாட்டுங்கா – முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் நேற்று காலை 10.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடந்தது. எனவே இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா – முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்பட்டன. எனவே ரெயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.டி. சுன்னாப்பட்டி, சி.எஸ்.டி. – பந்திரா இடையேயும் பராமரிப்பு பணிகள் நடந்தது. எனவே காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சி.எஸ்.டி. – பன்வெல், சி.எஸ்.டி. – அந்தேரி இடையே ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

துறைமுகம் மற்றும் மெயின் வழித்தடத்தில் சேவை பாதிக்கப்பட்டதால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தாமதமாக வந்த ரெயில்களில் பயணிகள் போட்டி போட்டு கொண்டு ஏறினர். துறைமுக வழித்தடத்தில் சில ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக கிருஷ்ண ஜெயந்திக்கு பொருட்கள் வாங்க வெளியே சென்ற பொது மக்கள் ரெயில்சேவை பாதிப்பால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்