விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க கோரி தமிழகம் முழுவதும் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரி தமிழகம் முழுவதும் வருகிற 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வேளாங்கண்ணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு விவசாயிகளின் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு நிவாரண தொகையை மத்திய அரசு அதிகமாக ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன.
மாநில மாநாடு
மேலும், வருகிற 21-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுய ஆட்சி மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் நீட் தேர்வு என்பது மாணவ, மாணவிகளை வஞ்சிப்பதாக உள்ளது. இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் அகில இந்திய அளவில் விலக்கு அளிக்க வேண்டும். தற்போது அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை முற்றிலும் பாதிக்கும் வகையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் 4 ஆதிதிராவிடர் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் அரசியல் பின்னணி காரணங்கள் உள்ளன. எனவே சாதி வாரிய சக்திகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.