கார் புரோக்கர் கொன்று புதைப்பு கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே, கார் புரோக்கரை கொன்று புதைத்த வழக்கில் கள்ளக்காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை சையத் நகரைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 26). இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் புரோக்கர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பர்வீன் (22). இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பர்வீன் சென்னையில் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சதாம் உசேன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக சதாம் உசேனின் மனைவி பர்வீன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவருக்கும், மகனூர் பட்டியைச் சேர்ந்த சர்தார் என்பவரின் மகன் மகபூப் ரகுமான் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் சதாம் உசேனை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து போலீசார், அவர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அது வருமாறு:-
மாயமான சதாம் உசேனுக்கும், சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த சபானா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. சபானா திருமணம் ஆனவர். அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு சபானாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த சதாம் உசேன், பர்வீனை திருமணம் செய்த பிறகு கள்ளத்தொடர்பை கைவிட்டிருந்தார்.
இந்த நேரத்தில் சபானாவிற்கும், மகபூப் ரகுமானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மகபூப் ரகுமான் எம்.எஸ்.சி., எம்.பில். பட்டதாரி ஆவார்.
இந்த நிலையில் சதாம் உசேன் தனது மனைவி பிரசவத்திற்காக ஊருக்கு சென்ற பிறகு மீண்டும் சபானாவுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். மேலும் சபானாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது சபானாவிற்கும், மகபூப் ரகுமானுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் சதாம் உசேனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 7-ந் தேதி சபானா போன் செய்து சதாம் உசேனை வீட்டிற்கு வரவழைத்தார். இதையடுத்து சதாம் உசேன் குடித்து விட்டு மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மகபூப் ரகுமான், நைலான் கயிற்றால் சதாம் உசேனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் சதாம் உசேனின் உடலை ஏற்றி அருகில் உள்ள விசுவாசம்பட்டி கிராமத்திற்கு கொண்டு சென்றார். அங்கு கேபிள் வயர் பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் சதாம் உசேனின் உடலை போட்டு மூடிவிட்டு சென்று விட்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தன.
இதையடுத்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தாசில்தார் தண்டபாணி மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று காலை விசுவாசம்பட்டி கிராமத்திற்கு சென்றனர். அங்கு சதாம் உசேனின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார்கள். பின்னர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக சபானா மற்றும் மகபூப் ரகுமான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காரப்பேட்டையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கார் புரோக்கரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.