சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி
வாட்டாத்திக்கோட்டை அருகே வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்
திருவோணம்,
தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகம் பாலத்தளியை அடுத்த எழுத்தாணிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. கொத்தனார். இவருடைய மகள் கலைவாணி (வயது17). இவர் பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு கலைவாணி வீட்டின் ஒரு பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து கலைவாணி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கலைவாணியை உறவினர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் கலைவாணி பரிதாபமாக இறந்தார்
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்யப் பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.