சிவன், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த கோரிக்கை
கிருஷ்ணராயபுரம் அருகே சிவன், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த கோரிக்கை
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ளது மேட்டுதிருக்காம்புலியூர். இந்த ஊரை சேர்ந்த சரவணன் என்பவர் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் பூமிக்கு அடியில் கோவில் அமைந்துள்ளதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது கனவில் தெரிந்ததை, அப்பகுதி மக்களிடம் கூறினார். இந்த நிலையில் வாய்க்கால் கரையோரம் மண்ணில் லேசாக புதைந்த நிலையில் சிறிய அளவில் சிவன் சிலை, பெரிய நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அதே இடத்தில் சிலைகளை வைத்து தினமும் பூஜைகள், பிரதோஷ வழிபாடுகளை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த இடத்தில் கோவில் புதைந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருதினர். இதையடுத்து ஊரின் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சிவகங்கை மாவட்டம் கருப்பூர் சென்று அங்கு சாமியிடம் அருள் வாக்கு கேட்டுள்ளனர். அப்போது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் மண்ணுக்கு அடியில் அம்மன் சிலை, கோவில் உள்ளதாக அருள் வாக்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த ஆறுமுகத்திற்கு அருள் வந்து கரையோரம் கோவில் இருப்பதாக ஒரு இடத்தை குறிப்பிட்டு குச்சி நட்டுள்ளார். அந்த இடத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் மண்ணை தோண்டிபார்த்தனர். அப்போது ஒரு சதுர வடிவில் கருங்கல் கிடைத்தது. பின்னர் 10 அடி ஆழத்திற்கு மேல் தோண்டிய போது கருங்கல் கட்டிடம் போல வெளியே தெரிந்தது. இதை ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பார்த்து செல்கின்றனர்.
இதனால் மேட்டு திருக்காம்புலியூரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். அந்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி சிலைகள் வேறு எதுவும் புதைந்துள்ளதா? கோவில் கட்டிடம் எதுவும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.