வேலூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் – அமைச்சர் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார்

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வேலூர் கோட்டை மைதானத்தில் அடுத்த மாதம் 9–ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2017-08-12 23:10 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வேலூர் கோட்டை மைதானத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், கோட்டை மைதானம் அருகே தேசிய அளவிலான கைவினைப்பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெறும் அரங்கத்திற்கு சென்று கைவினைப்பொருட்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில், வேலூர் கோட்டை வெளிமைதானத்தில் வருகிற 9–ந் தேதி நடைபெற உள்ளது. விழா தொடர்பாக கோட்டை மைதானத்தை ஆய்வு செய்யும் பணி இன்று (நேற்று) நடந்தது. விழாவில் முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது’ என்றார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன், தாசில்தார் பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்