தினமும் 120 டன் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது அதிகாரி தகவல்
திருச்சி மாநகராட்சி பகுதியில் தினமும் 120 டன் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் வாரத்தில் இருந்து புதன்கிழமை தோறும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் தனியாக பிரித்து சேகரிக்கப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுவினர், அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை தாங்கி நகர பொறியாளர் நாகேஷ் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சி பகுதியில் தினமும் சுமார் 420 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவற்றில் 120 டன் குப்பைகள் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் 13 இடங்களில் செயல்பட்டு வரும் நுண்ணுரம் செயலாக்க மையங்களில் பதப்படுத்தப்பட்டு இயற்கை உரமாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படும் குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
சமையலுக்கு எரிவாயு
மக்காத குப்பைகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டு அவற்றில் கிடைக்கும் வருவாய் தூய்மை இந்தியா இயக்க பாதுகாவலர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 500 பணியாளர்கள் பலன் அடைந்து வருகிறார்கள். காய்கறி கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு இ.பி. சாலை மற்றும் உறையூரில் தயாரிக்கப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு சேமிப்பு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக சமையல் செய்வதற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5 ஆயிரம் அபராதம்
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆலோசனை கூட்டத்தில், வீடுகளில் செப்டிக் டேங்குகளில் இருந்து கழிவுநீரை சேகரிக்கும் லாரி உரிமையாளர்கள் அவற்றை அனுமதி பெறாத இடங்களில் திறந்து விட்டால் முதல் முறையாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே தவறை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் லாரி பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர பொறியாளர் நாகேஷ் கூறினார்.