குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வையம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-12 22:30 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டியில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்