ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது வினாடிக்கு 7000 கன அடி வருகிறது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 8,200 கன அடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டியது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவை மத்திய நீர்பாசனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கூடுதல் போலீசார் பாதுகாப்பு
நேற்று முதல் வருகிற 15-ந் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் பரிசலில் சென்றும், தொங்கு பாலம், பார்வை கோபுரம் ஆகிய இடங்களுக்கு சென்றும் காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் உணவகங்கள், கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மீன் வறுவல் விற்பனையும் சூடுபிடித்தது. இன்னும் 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.