பெண் போலீஸ் ஏட்டு திடீர் மரணம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை மதுரவாயல் ஏரிகரை தெரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி(வயது 39). சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
சென்னை,
ஸ்ரீதேவி நேற்று கமிஷனர் அலுவலகத்தின் 6-வது மாடியில் பணியில் இருந்தார். மதியம் உணவு சாப்பிட்டு விட்டு அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, ‘தனக்கு மயக்கம் வருவது போன்று இருக்கிறது’ என்று சக போலீசாரிடம் ஸ்ரீதேவி கூறியுள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் கொடுத்தார். இந்தநிலையில் ஸ்ரீதேவி தனது நாற்காலியில் அமர்ந்தவாறே மரணம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த சக போலீசாரும், அதிகாரிகளும் கண்ணீர்விட்டனர். ஸ்ரீதேவியின் மரணத்தால் கமிஷனர் அலுவலகம் நேற்று சோகமயமானது.
ஸ்ரீதேவியின் கணவர் பெயர் சற்குணம். டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள்ளார். 3 வயதில் மகனும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ஸ்ரீதேவிக்கு சுவாச பிரச்சினை கோளாறு இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளதாக சக போலீசார் தெரிவித்தனர்.