வேளச்சேரியில் 4–வது மாடியில் இருந்து குதித்து பெண் அதிகாரி தற்கொலை

வேளச்சேரியில் 4–வது மாடியில் இருந்து குதித்து பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-12 22:45 GMT

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவிக்குமார். இவரது மனைவி ஆனந்தி (வயது 40), இவர் சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலை செய்து வந்தார்.

ஆனந்தி கடந்த சில தினங்களாக மன அழுத்ததில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கணவர் ரவிக்குமார் நேற்று வெளியூர் சென்றார்.

தற்கொலை

வீட்டில் இருந்த ஆனந்தி, அடுக்குமாடி குடியிருப்பின் 4–வது மாடிக்கு சென்று திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து பெண் அதிகாரி தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்