துப்பாக்கி சுடும் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் பெரம்பலூர் காவல் துறை துப்பாக்கி சுடுதளத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் வருடாந்திர பயிற்சியானது நேற்று காலை நடைபெற்றது.

Update: 2017-08-12 22:30 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் பெரம்பலூர் காவல் துறை துப்பாக்கி சுடுதளத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் வருடாந்திர பயிற்சியானது நேற்று காலை நடைபெற்றது. இப்பயிற்சியில் திருச்சி மத்திய மண்டலம் காவல் துறை தலைவர், திருச்சி மாநகர காவல் ஆணையர், காவல் துறை தலைவர், கமொண்டொ, 2 காவல் துணை தலைவர்கள், திருச்சி சரகம், தஞ்சாவூர் சரகம் மற்றும் 9 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மாநகர 2 துணை ஆணையர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியோர் பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்