ஆதம்பாக்கத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த வாலிபர் கைது

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பெரியார் நகர் 9–வது தெருவில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.

Update: 2017-08-12 23:30 GMT

ஆலந்தூர்,

திருமணம் ஆகாத அவர், பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 6–ந் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அவரை, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை தேடிவந்தனர்.

போலீசார் அந்த பெண்ணின் நண்பர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய நண்பர் ஒருவர் அந்த பெண் மீது தவறான எண்ணத்துடன் இருந்ததாக கூறினார். இதையடுத்து கே.கே.நகரில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரியும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மன்சூர்அலி (வயது 31) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், தனது நண்பர் அடிக்கடி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறினார். இதனால் நானும் அவரை அடைய திட்டமிட்டு அவரது வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர் மறுத்ததால் கத்திமுனையில் மிரட்டி கற்பழித்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து மன்சூர் அலியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்