கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் ஜாமீனில் விடுதலை

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தின் அடியில் குழாய்கள் பதித்து எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழாயில் கடந்த ஜூன் மாதம் கசிவு ஏற்பட்டதால், அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-08-12 23:00 GMT

திருச்சி,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தின் அடியில் குழாய்கள் பதித்து எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழாயில் கடந்த ஜூன் மாதம் கசிவு ஏற்பட்டதால், அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் நேற்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்