திருச்செந்தூர் அருகே மினிலாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் சாவு
திருச்செந்தூர் அருகே மினி லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே மினி லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மளிகை கடைக்காரர்திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 65). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது கடைக்கு தேவையான பொருட்களை திருச்செந்தூருக்கு சென்று வாங்கி விட்டு, இரவில் தனது ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது அவர் தனது ஊரைச் சேர்ந்த உறவினரான சுப்பிரமணியனையும் (58) மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். திருச்செந்தூர்– குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் கந்தசாமிபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே மீன் லோடு ஏற்றி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
2 பேர் சாவுஇந்த விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட ராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிச்சையா வழக்குப்பதிவு செய்து, மினிலாரி டிரைவரான தட்டார்மடம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனிடம் விசாரித்து வருகிறார். மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.