அரக்கோணம் தாலுகாவில் 60 சதவீத பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது

அரக்கோணம் தாலுகாவில் 60 சதவீத பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-11 23:10 GMT

அரக்கோணம்,

இதுகுறித்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன் கூறியதாவது:–

அரக்கோணம் தாலுகாவில் 76 ஆயிரத்து 979 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த அட்டைகளுக்கு ‘ஸ்மார்ட்’ அட்டைகள் வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 47 ஆயிரத்து 16 குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. அரக்கோணம் தாலுகாவில் 60 சதவீதம் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 3 கட்டங்களாக விரைவில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ‘ஸ்மார்ட்’ அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருத்தங்கள்

இதில் திருத்தங்கள், மாற்றங்கள் எதுவும் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலகம், ஆன்லைன் இ–சேவை மையங்களில் கொடுத்து எளிதாக மாற்றி கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

ரேசன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது முகவரி தவறு, செல்போன் எண் கொடுக்காமல் இருத்தல், போட்டோ கொடுக்கப்படாமல் விடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகளுடன் 11 ஆயிரம் அட்டைகள் இருந்து வந்தது. அந்த அட்டைகளின் விவரங்களை அந்தந்த ரே‌ஷன் கடைகளுக்கு கொடுத்து அதில் உள்ள குறைபாடுகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டு உள்ளது. 11 ஆயிரம் அட்டைதாரர்களின் விவரங்கள் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

அரக்கோணம் தாலுகாவில் உள்ள 152 ரே‌ஷன் கடைகளுக்கும் தினமும் பெயர் சேர்க்க பயனாளிகள் சென்று விற்பனையாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். அந்த பயனாளிகளை விற்பனையாளர்கள் தாலுகா அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர். பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சிறிய குறைகளுக்கு ரே‌ஷன்கடைகளில் உள்ள ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிகள் மூலமாக சரிசெய்து கொடுக்கலாம். அவ்வாறு செய்யாமல் விற்பனையாளர்கள் பயனாளிகளை அலைகழிக்க கூடாது. பெயர் சேர்க்க வரும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி மூலமாக பெயர்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்