பெரியபாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த மதுக்கடை ஊழியர் பலி

பெரியபாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த மதுக்கடை ஊழியர் பலியானார்.

Update: 2017-08-11 23:08 GMT

பெரியபாளையம்,

வெங்கல், காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 45). இவர் சென்னை புதுப்பேட்டையில் உள்ள மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

பொன்னுசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் பெரியபாளையம் செங்காத்தாகுளம் சாலையில் உள்ள மதுக்கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து பொன்னுசாமி மயங்கினார்.

சாவு

இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியபாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சத்யபாமா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்