பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது

சென்னை கொளத்தூர் லட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவியை கடந்த 6–ந்தேதி மர்மநபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் கடத்திச்சென்று ரெட்டேரி பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

Update: 2017-08-11 22:48 GMT

செங்குன்றம்,

பின்னர் அவர் அந்த மாணவியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றார். மாணவி தனியாக நின்றதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இதுபற்றி மாணவியின் தந்தை ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அமலா வழக்குப்பதிவு விசாரித்து வந்தார். இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த முண்டியம்மன் நகர் எம்.ஏ. தெருவை சேர்ந்த சிவா என்ற சிவசங்கரன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து சிவாவை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்