கருவில் உள்ள குழந்தை பற்றி அறிவித்தால் டாக்டரின் மருத்துவ கவுன்சில் பதிவு ரத்து செய்யப்படும்
கருவில் உள்ள குழந்தை பற்றி அறிவித்தால் டாக்டரின் மருத்துவ பதிவு ரத்து செய்யப்படும் என கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுபற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி,
சோமரசம்பேட்டை புதுத்தெரு, கே.கே.நகர் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு 10 படுக்கைகள் இருந்தன. சுமார் 20 நோயாளிகள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தனர். மருந்தகம் மற்றும் ஆய்வகம் இருந்தது. மருத்துவமனையில் மருத்துவர் மணிகண்டபிரபு என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அங்கு 7 பணியாளர்கள் பணியில் இருந்தார்கள்.
அங்கு உரிமம் பெறாத புதிய ஸ்கேன் எந்திரம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எந்திரம் கருவின் பாலினம் அறிவித்தல், பாலின தேர்வை தடைசெய்தல் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி ஸ்கேன் மைய உரிமையாளர்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்கள் கருவின் பாலினத்தை கர்ப்பிணி பெண்ணிடமோ, உறவினரிடமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ அறிவித்தால் சம்பந்தப்பட்ட ஸ்கேன் மைய உரிமையாளர்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை சம்பந்தப்பட்ட மருத்துவரின் மருத்துவக் கவுன்சில் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். மேலும், நீதிமன்றத்தில் குற்றம் முதன்முறையாக நிரூபிக்கப்பட்டால் 5 வருடத்திற்கு சம்பந்தப்பட்ட மருத்துவரின் மருத்துவக் கவுன்சில் பதிவு ரத்து செய்யப்படும்.
கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் பரிசோதனை செய்யும்பொழுது ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவரிடமோ அல்லது அங்கு பணிபுரியும் ஊழியரிடமோ, கருவின் பாலினம் ஆணா, பெண்ணா என அறிய வலியுறுத்தும் கணவர் மற்றும் உறவினர்களுக்கு பாலினத் தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.