தஞ்சையில் டி.டி.வி.தினகரனுடன் 2-வது நாளாக 9 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியும், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி மரணம் அடைந்தார்.

Update: 2017-08-11 23:15 GMT
தஞ்சாவூர்,

சந்தானலட்சுமி படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. இதில் புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன், டி.டி.வி.தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி(தஞ்சை), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), உமாமகேஸ்வரி(விளாத்திக்குளம்), சுப்பிர மணியன்(சாத்தூர்), சுந்தர்ராஜன்(ஓட்டப்பிடாரம்), மாரியப்பன்கென்னடி(மானாமதுரை), பழனியப்பன்(தர்மபுரி), தங்க.தமிழ்ச்செல்வன்(ஆண்டிப்பட்டி), ஜக்கையன்(கம்பம்) ஆகிய 9 பேரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரனை 2-வது நாளாக சந்தித்து தனியாக அமர்ந்து ஆலோசனை நடத்தினர். தங்கதுரை(நிலக்கோட்டை), கதிர்காமு(பெரியகுளம்), முத்தையா(பரமக்குடி) ஆகிய 3 பேர் நேற்றுமுன்தினம் தஞ்சைக்கு வந்து டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசினர்.

மேலும் செய்திகள்