தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி ஒன்றிய செயலாளர் குமரேசபாண்டியன் தலைமை தாங்கினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு முறையை தமிழகத்தில் ரத்து செய்து விட்டு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் கவுர்மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்தனர்.