விபத்தில் இறந்துபோன மெக்கானிக் குடும்பத்திற்கு ரூ.11½ லட்சம் நஷ்டஈடு
விபத்தில் இறந்துபோன மெக்கானிக் குடும்பத்திற்கு ரூ.11½ லட்சம் நஷ்டஈடு விருதுநகர் கோர்ட்டு உத்தரவு
விருதுநகர்,
சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்ப்பாண்டி(வயது 20). இவர் நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரில் ஒரு வேனை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேனை தூக்கி நிறுத்தியிருந்த ஜாக்கி நழுவிச் சரிந்ததில் வேன் தமிழ்ப்பாண்டி மீது விழுந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அன்புச்செழியன் மற்றும் குடும்பத்தினர் நஷ்டஈடு வழங்கக்கோரி விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி முருகேசன் விபத்தில் இறந்த வாலிபர் தமிழ்ப்பாண்டியின் குடும்பத்திற்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.11½ லட்சம் நஷ்டஈட்டை 7½ சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.