சீன பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சி மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சீன பொருட்களை தடை செய்யக்கோரி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-08-11 22:30 GMT

ஊட்டி,

இந்து மக்கள் கட்சி மகளிர் அணி சார்பில், தமிழகத்தில் சீன பொருட்களை தடை செய்யக்கோரி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சீன பொருட்கள் சந்தைப்படுத்துவதை தடை செய்யக்கோரி கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி கூறியதாவது:–

சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் கள்ளத்தனமாக கொண்டு வந்து சந்தைப்படுத்தி வருகிறார்கள். இதனால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் அழியும் அபாயம் உள்ளது. தற்போது ஒரு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். இது தமிழகத்தில் கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது. எனவே, உடனடியாக அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்