நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களின் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நெல்லை,

சேரன்மாதேவி – விக்கிரமசிங்கபுரம்
சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் அமலா தங்கத்தாய் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் முன்னிலை வகித்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் பரமசிவம், விஜயராஜன், கந்தசாமி, கல்பனா, ஜெனி, சுமதி, அன்னலட்சுமி மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, முஸ்லிம் கமிட்டி உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ–மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆறுமுகசாமி, பசுமைப்படை அலுவலர் அகஸ்டின் பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் சார்பில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் அழகப்பன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், புஷ்பா ரஞ்சிதம், லாரன்ஸ், வில்லியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பலவாணபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சந்தன மாரியம்மன் கோவில் வரை சென்று பின்னர் ரதவீதி வழியாக வந்து பி.எல்.டபிள்யூ.ஏ. பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தில் பி.எல்.டபிள்யூ.ஏ. பள்ளி, அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி, சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருஇருதய மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் திரளான கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது, வீட்டுக்கு ஒரு கழிவறை வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி வந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.
மேலப்பாளையம்
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபாண்டி சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சேக் முகம்மது தலைமை தாங்கினார். முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத் முன்னிலை வகித்தார். ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம், செக்கடி தெரு, கல்வத் நாயகம் தெரு, குறிச்சி சந்திப்பு, நேதாஜி ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தது. ஆய்வாளர் வெள்ளத்துரை, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவபிச்சை, சாரணப்படை ஒருங்கிணைப்பாளர் சாரதி, ஆசிரியர்கள் முகம்மது ஆதம், ஜமால் முகைதீன், பேச்சிமுத்து, கருப்பசாமி, தமிமுன் அன்சாரி, இஸ்மாயில், நஸிமுதீன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு காதிர்நகர் மு.ந.அப்துர்ரஹ்மான் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் முகம்மது அப்துல்நாசர், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அண்ணாநகர், ஜெயா நகர், முபாரக் நகர், பாலாஜிநகர், கலெக்டர் நகர் போன்ற பகுதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பேட்டை–நடுக்கல்லூர்
பேட்டையில் காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியை மர்பி இஸ்ரேல், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சேது பிச்சை ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இதுதொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கதிர் வள்ளியம்மாள், தேசிய சாரணர் இயக்க ஆசிரியர் சாம்ராஜ், நுகர்வோர் மன்ற ஆசிரியர் குருசாமி, தேசிய பசுமைப்படை ஆசிரியர் சீதாராமன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.
நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சார்பில் தலைமை ஆசிரியை மேரி முத்துக்குமாரி தலைமையில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை லீனா பாக்கிய செல்வி நன்றி கூறினார்.