திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2017-08-10 23:56 GMT

திருவண்ணாமலை,

தமிழ்நாடு மாநில எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம், திருவண்ணாமலை எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. ஊர்வலத்திற்கு தமிழ்நாடு மாநில எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்க தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை எலும்பு முறிவு சங்க துணைத்தலைவர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, காமராஜ் சிலை அருகே முடிவடைந்தது. இதில் அரசு மருத்துவர் கணேசன், செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் எலும்பு முறிவு மற்றும் தேய்மானத்திற்கு இலவச பரிசோதனை முகாம் நடந்தது.


மேலும் செய்திகள்