வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 15–ந் தேதி விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 15–ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-08-10 23:49 GMT

வேலூர்,

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்திற்கும் சுதந்திரத்தினமான வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மதுக்கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்