சரக்கு, சேவை வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு ஆணையர் தகவல்
சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி வணிகவரி துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சரக்கு மற்றும் சேவை வரியில் பதிவு பெற்ற வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக அந்த மாதத்தின் தங்களுடைய சரக்கு மற்றும் சேவைகளின் விற்பனை செய்த விவரங்களை ஜி.எஸ்.டி.ஆர்.–1 படிவம் வாயிலாக அதற்கு அடுத்த மாதம் 10–ந் தேதி அல்லது அதற்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல் தங்களுடைய கொள்முதல் விவரங்களை ஜி.எஸ்.டி.ஆர்.–2 படிவம் வாயிலாக அதற்கு அடுத்த மாதம் 15–ந் தேதி அல்லது அதற்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.ஆர்.–1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்.–2 வாயிலாக தாக்கல் செய்த விவரங்களுடன் செலுத்த வேண்டிய வரி விவரம் மற்றும் அந்த வரியினை செலுத்தி ஆன்லைனில் ஜி.எஸ்.டி.ஆர்.–3 வாயிலாக 20–ந் தேதி அல்லது அதற்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.
நீட்டிப்புவணிகர்கள் ஜி.எஸ்.டி.யில் சுமூகமாக மாறுவதற்கு ஏதுவாக ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு சரக்கு மற்றும் சேவைகளின் விற்பனை மற்றும் கொள்முதல் சுருக்க விவரங்களை ஒரு எளிமையான வரி விவர தாக்கல் படிவமான ஜி.எஸ்.டி.ஆர்.–3 பி வாயிலாக ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கான ஜி.எஸ்.டி.ஆர்.–1, ஜி.எஸ்.டி.ஆர்.–2, ஜி.எஸ்.டி.ஆர்.–3 ஆகிய படிவங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–
மாதம்ஜி.எஸ்.டி.ஆர்.–1ஜி.எஸ்.டி.ஆர்.–2ஜி.எஸ்.டி.ஆர்.–3
ஜூலை1.9.2017 முதல் 5.9.2017 வரை6.9.2017 முதல் 10.9.2017 வரை11.9.2017 முதல் 5.9.2017 வரை
ஆகஸ்டு16.9.2017 முதல் 20.9.2017 வரை 21.9.2017 முதல் 5.9.2017 வரை 26.9.2017 முதல் 30.9.2017 வரை
வணிகர்கள் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்களை மேற்கூறப்பட்ட தேதிகளுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.