புனேயில் துப்பாக்கியுடன் ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

புனே மாவட்டம் வெல்கே தாலுகா பகுதியில் உள்ள ருலே கிராமத்தை சேர்ந்தவர் தானாஜி மர்காலே (வயது36). இவர் ஜில்லா பரி‌ஷத் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

Update: 2017-08-10 22:36 GMT

புனே,

புனே மாவட்டம் வெல்கே தாலுகா பகுதியில் உள்ள ருலே கிராமத்தை சேர்ந்தவர் தானாஜி மர்காலே (வயது36). இவர் ஜில்லா பரி‌ஷத் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக புனே ரூரல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தானாஜி மர்காலேயை பிடித்து சோதனை போட்டனர். இந்த சோதனையில் அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் தத்தாரே என்பவரிடம் இருந்தும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், தானாஜி மர்காலே, கிராமத்தினருடன் பிரச்சினை இருப்பதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதாகவும், பீகாரை சேர்ந்தவரிடம் அதனை வாங்கியதாகவும் தெரிவித்தார். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்