முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த அத்தியூர் அணைக்கட்டு பயன்பாட்டிற்கு வந்தது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த அத்தியூர் அணைக்கட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக திகழும் பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகும் மழைநீர் மற்றும் ஊற்று நீர், கல்லாறு உள்ளிட்ட சிறு காட்டாறுகள் வழியாக வெள்ளாற்றில் கலந்து சென்று வங்காள விரிகுடாவில் வீணாக கலக்கிறது. வெள்ளாற்றின் குறுக்கே தொழுதூரில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு கிழக்கு பகுதியில் 30 கி.மீ. தூரத்திற்குள் எந்த அணைக்கட்டும் கட்டப்படாததால் மழைக்காலங்களில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழக்குடிகாடு கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அத்தியூர் அணைக்கட்டு பொதுப்பணித்துறையின் மூலம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.8 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
1,204 ஏக்கர் விவசாய நிலம்
இந்த அணைக்கட்டு சுமார் 240 மீட்டர் நீளமும், 1.71 மீட்டர் உயரமும் கொண்ட கான்கிரீட் தடுப்பு சுவர்களை கொண்டது. இந்த அணைக்கட்டு மூலம் வெள்ளாற்று நீர் வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த அணைக்கட்டில் இருந்து மழைக்காலத்தில் வரத்து வாய்க்கால் மூலம் சுமார் 257 கன அடி நீர் கொண்டு செல்லப்பட்டு அத்தியூர், கிழுமத்தூர், கைப்பெரம்பலூர் மற்றும் வயலூர் ஆகிய 4 ஏரிகளில் நிரப்பப்படும்.
இதன்மூலம் சுமார் 1204.80 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும், உபரி நீர் சின்னாற்றில் கலந்திட அமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்தியூர் அணைக்கட்டின் மூலம்...
இந்த அணைக்கட்டின் மேல்புறம் 200 மீட்டர் நீளமும், கீழ்புறம் 50 மீட்டர் நீளமும் கரை அமைக்கப்பட்டு, இரு புறங்களிலும் தலா 4 மணற்போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சுமார் 10 கி.மீ. நீளத்திற்கு வரத்து வாய்க்கால் சீர் செய்யப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த அணைக்கட்டு மூலம் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர் உயரவும், கால்நடைகள் பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுப்புறம் செழிக்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அணைக்கட்டு மூலம் இப்பகுதியில் மொத்த உணவு உற்பத்தி 3169.27 மெட்ரிக் டன் அளவை எட்டும். இந்த அணைக்கட்டின் மூலம் அத்தியூர், கிழுமத்தூர், கைப்பெரம்பலூர் மற்றும் வயலூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள். பெரம்பலூரில் கடந்த 5-ந்தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த அணைக்கட்டை திறந்து வைத்தார். தற்போது மழைநீர் வரத்து தொடங்கி உள்ளதால் இந்த அணைக்கட்டு விவசாயிகளின் பயன் பாட்டிற்கு வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.